
400 ஆண்டுகளுக்கு முன், ஒரு பெண் விட்ட சாபத்தால் இதுநாள் வரை நேரடி வாரிசு இல்லாமல் தவித்து வந்த மைசூரு மகாராஜா குடும்பத்துக்க இப்போது வாரிசு உருவாகியுள்ளது.
மைசூரு மன்னர் குடும்பத்து இளவரசி திரிஷிகா குமாரி கர்ப்பம்தரித்துள்ளதையடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாபம்
விஜயநகரப் பேரரரசின் பிரதிநிதியாகிய திருமலைராஜாவின் குடுபத்தைநிர்கதியாக்கிய, மைசூரு உடையாரா ராஜா குடும்பத்தில் வாரிசு இல்லாமல் போக வேண்டும் என்று திருமலைராஜாவின் மனைவி அலமேலம்மா சபித்துவிட்டார். இதனால், 400 ஆண்டுகளாக வாரிசு இல்லாமல் தவித்து வந்த மைசூரு ராஜ குடும்பத்துக்க இப்போது வாரிசு கிட்டியுள்ளது.
வரலாறு...
1399ம் ஆண்டு முதல் விஜயநகர பேரரசின் ஆட்சிப்பகுதியான மைசூரு பகுதியை உடையார் வம்ச மன்னர்கள் ஆண்டு வந்தனர். தங்களது ஆட்சியை நீட்டிக்கும் வகையில், விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக இருந்த திருமலைராஜாவின்ரெங்கபட்டிணம் மீது 1610-ம் ஆண்டு முதலாம் ராஜ உடையார் போர் தொடுத்து வீழ்த்தினார்.
திடீர் மரணம்
இதையடுத்து தலக்காடு எனும் நகருக்கு திருமலைராஜா தனது மனைவிகளுடந் குடிபெயர்ந்தார். இதனிடேயே நோயால் பாதிக்கப்பட்டு இருந்த திருமலைராஜாதிடீரென மரணமடைந்துவிடுகிறார்.
நகைகளை கொடுக்க மறுப்பு
இதில் திருமலைராஜாவின் 2-வது மனைவி அலமேலம்மா, ரங்கப்பட்டிணம், ரங்கநாதர் கோயிலின் ரெங்கநாயகி மீது அளவற்ற பக்தையாக இருந்தார். இதனால், தலக்காடு நகருக்கு செல்லும் போது கடவுள் ரெங்கநாயகிக்கு சூட்டி இருந்நகைகள், வைரம், முத்து நகைகள் அலமேலம்மா தன்னுடன் எடுத்து சென்றார். இவற்றை ரங்கபட்டிணத்தை கைப்பற்றி உடையார ராஜா கேட்டபோது, அதை தரஅலமேலம்மா மறுத்துவிட்டார்.
பறிப்பு
இதைத் தொடர்ந்து 1612ம் ஆண்டு உடையார் ராஜாவின் உத்தரவின் பேரில், தலக்காடு அருகே மாலங்கி என்ற கிராமத்தில் வசித்து வந்த அலமேலம்மாவிடம்இருந்த நகைகளை உடையாரின் படையினர் வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றனர்.
சாபம்..
அப்போது தன் இயலாமையை நினைத்து கண்ணீர் விட்டு அழுத அலமேலம்மா, உடையார் குடும்பத்துக்கு சாபமிட்டார். மைசூரு மன்னர்களுக்கு குழந்தை பேறு இல்லாமல் போகட்டும் என அலமேலம்பா சாபமிட்டார்.
வாரிசு இல்லை
இதனால், அன்று முதல் இன்றுவரை மைசூரு உடையார் ராஜ குடும்பத்துக்க நேரடியாக எந்த வம்சமும் இல்லாமல் இருந்து வந்தது.
வாரிசுக்கு திருமணம்
உடையார் மன்னர் வம்சத்தின் கடைசி மன்னரான சாமராஜ உடையார் மகன் கண்டதத்த நரசிம்ம ராஜ உடையார் இளவரசார இருந்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு இவர் மறைவுக்குப் பின், அவருடைய தூரத்து உறவினரான யதுவீர்கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் 2015ம் ஆண்டு இளவரசாரக முடிசூடப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு, ஜூன் 27-ந்தேதி, துங்கப்பூர் மன்னர் குடும்பத்து இளவரசியான திரிஷிகா குமாரி தேவியை, யதுவீர் கிருஷ்மத்த சாம்ராஜ உடையார் திருமணம் செய்து கொண்டார்.
மக்கள் கவலை
அலமேலம்மா விட்ட சாபத்தால் இந்த ஜோடிக்கும் குழந்தை இல்லாமல் போய்விடும் என மக்கள் அஞ்சி, கவலை கொண்டு இருந்தனர்.
மகிழ்ச்சி
ஆனால், மாண்டியா,மைசூரு, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்ட மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், இளவரசி திரிஷிகா இப்போது கர்ப்பமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
400 ஆண்டுகால அலமேலம்மாவின் சாபம் இப்போது முடிவுக்கு வந்துள்ளததாககர்நாடக மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.