டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை...

 
Published : Jun 16, 2017, 01:28 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை...

சுருக்கம்

CBI team at Delhi Deputy CM Manish Sisodias residence

டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக கெஜ்ரிவாலும், துணை முதலமைச்சராக மணிஷ் சிசோடியாவும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மீது, முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா பரபரப்பை ஏற்படுத்தினார். கபில் மிஸ்ரா பாஜக  ஏஜென்டாக செயல்பட்டதாக கூறி, அர்விந்த் கெஜ்ரிவால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இது தொடர்பாக அக்கட்சியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது.

அரசு விளம்பரம், குடிநீர் திட்டம் போன்றவற்றில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிபிஐ சோதனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!