"மாட்டிறைச்சி தடையை ஏற்க முடியாது" - புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!

 
Published : Jun 16, 2017, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
"மாட்டிறைச்சி தடையை ஏற்க முடியாது" - புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!

சுருக்கம்

decision made in puducherry assembly against beef ban

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய தடைவிதித்து அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து கேரளா, மேகாலயா மாநிலங்கள்த தொடர்ந்து  புதுச்சேரி சட்டப் பேரவையிலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இறைச்சிக்காக மாடு, எருமை ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு  நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, திரிபுரா, மேகாலயா, கர்நாடகா  உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வது தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  கேரளா மற்றும் மேகாலயா சட்டசபைகளில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. கட்சி தலைவர்கள் இருவர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வது தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  புதுச்சேரி சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!