
வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் எனவும், ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணபரிவர்த்தனைக்கு ஆதார் எண் அவசியம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
வருமானவரி தாக்கல், உரம் வாங்குதல, விமான பயணம், ரயில் பயணம், அரசு சலுகைகள் என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தமையால் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே லட்டு வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் எனவும், ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணபரிவர்த்தனைக்கு ஆதார் எண் அவசியம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குல் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் எனவும், இல்லையென்றால் வங்கி கணக்கு ரத்தாகி விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.