சந்திரயான் 3 வெற்றி பெற வேண்டும்.. லக்னோவில் முஸ்லீம்கள் பிரார்த்தனை..

By Ramya sFirst Published Aug 23, 2023, 11:44 AM IST
Highlights

சந்திரயான் 3 திட்டம்  வெற்றி பெறுவதற்காக இந்தியர்கள் கோயில்கள் மற்றும் மசூதிகளில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.05 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்த நிகழ்வை ஒட்டுமொத்த உலக நாடுகளும் உற்றுநோக்கி வரும் நிலையில், சந்திரயான் 3 திட்டம்  வெற்றி பெறுவதற்காக இந்தியர்கள் கோயில்கள் மற்றும் மசூதிகளில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த வகையில் லக்னோவில், திங்களன்று இஸ்லாமியர்கள் இந்தியாவின் இஸ்லாமிய மையத்தில் தொழுகை நடத்தி சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்குவதற்காக பிரார்த்தனை செய்தனர்.

இதனிடையே சந்திரயான் திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் உரிமையாளர் எலோன் மஸ்க், சந்திரயான் -3 இன் லட்சிய விண்வெளி பயணத்திற்கு இந்தியாவுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Chandrayaan-3 : சந்திரயான்-3 வெற்றியை இந்தியா கொண்டாடும்.. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பேச்சு

லண்டனில், இங்கிலாந்திற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஒரு தேசமாக இந்தியாவின் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பற்றி பெரிய அறிக்கை எதுவும் இருக்க முடியாது என்று கூறினார். "என்னைப் பொறுத்தவரை, ஒரு தேசமாக இந்தியாவின் குறிப்பிடத்தக்க வெற்றியை விட பெரிய விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. நான் இதை ஒரு இந்திய தூதராக மட்டும் கூறவில்லை, ஒரு பெருமைமிக்க இந்தியனாக," என்று அவர் கூறினார்.

பொருளாதார வசதிகள் குறைவாக இருந்தபோதுதான் இந்தியா விண்வெளித் திட்டத்தைத் தொடங்கியது என்றும் அவர் கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர் "இந்தியாவில் பொருளாதார வசதிகள் மிகக் குறைவாக இருந்த காலக்கட்டத்தில் நான்ம் விண்வெளித் திட்டத்தைத் தொடங்கினோம். இன்று இது மனித கற்பனையால் மட்டுமே வரையறுக்கப்பட்ட ஒரு விண்வெளித் திட்டம். நிலவில் எதையும் தரையிறக்கும் திறன் கொண்ட சில நாடுகளில் நாமும் இருப்போம். இது இந்த உலகில் நடைமுறையில் அனைவருக்கும் முன்னால் உள்ளது. இந்தியாவின் கனவுகளுக்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சந்திரயான்-3 சாஃப்ட் லேண்டிங் குறித்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. ரஷ்யாவின் லூனா-25 திட்டம் தோல்வியடைந்த பிறகு, இந்தியாவின் சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்க உள்ளதால், அனைவரின் பார்வையும் இந்தியாவின் மீது உள்ளது. தரையிறங்கும் நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு புதன்கிழமை மாலை 5:20 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ISRO இணையதளம், இஸ்ரோ யூடியூப் சேனல், Facebook மற்றும் பொது ஒளிபரப்பு நிறுவனமான DD நேஷனல் டிவியில் ஆகஸ்ட் 23, 2023 அன்று மாலை 5:27 PM IST இல் சந்திரயான் 3 தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்கலாம்.

click me!