முஸ்லிம்களால் இந்துக்களுக்கு ஆபத்து - பா.ஜனதா எம்.எல்.ஏ. ‘விஷமப் பேச்சு’

Asianet News Tamil  
Published : Jan 02, 2018, 06:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
முஸ்லிம்களால் இந்துக்களுக்கு ஆபத்து - பா.ஜனதா எம்.எல்.ஏ. ‘விஷமப் பேச்சு’

சுருக்கம்

Muslims are at risk for the Hindus

நாட்டில் இந்துக்களின் எண்ணிக்கையை விட அதிகரிக்க வேண்டும் எனும் நோக்கில் முஸ்லிம்கள் அதிகமாக குழந்தைகளை பெற்று வருகிறார்கள். 2030ம் ஆண்டுக்குள் இந்துக்கள் எண்ணிக்கையைவிட அவர்களின் மக்கள் தொகை அதிகரித்துவிடும் என்று  ராஜஸ்தான் மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜனதா எம்.எல்.ஏ.

ராஜஸ்தான் மாநில பா.ஜனதா அரசில் ஆல்வார் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பன்வாரி லால் சிங்கால். இம்மாதம் 29-ந்தேதி ஆல்வார் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது.

அது குறித்து எம்.எல்.ஏ. பன்வாரி லால் சிங்கால் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

14 குழந்தைகள்

நாட்டில் உள்ள முஸ்லிம்கள் 12 முதல் 14 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இந்துக்கள் ஒன்று அல்லது 2 குழந்தைகள் வரை மட்டுமே பெற்றுக்கொள்கிறார்கள். நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து வருவது, இங்கிருக்கும் இந்துக்களுக்கு ஆபத்தானதாகும்.

உயர் பதவிக்கு சதி

இந்த நாட்டின் ஜனாதிபதியாக, பிரதமராக , மாநில முதல்வராக வர வேண்டும் என திட்டமிட்டு சதிசெய்து முஸ்லிம்கள் இவ்வாறு செய்து வருகிறார்கள். முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக வரும் சூழலில் இந்துக்கள் 2-ம் தர குடிமக்களாக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

திரும்பப் பெற முடியாது

இந்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து எம்.எல்.ஏ. சிங்காலிடம் நிருபர்கள் கேட்டபோது, “ நான் நீண்ட ஆலோசனைக்கு பின்பு தான் இந்த கருத்தை என பேஸ்புக் பக்கத்தில் எழுதினேன். இந்த கருத்தை நான் திரும்பப் பெறப்போவதில்லை. இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி குறித்த வீடியோவை பார்த்துவிட்டுதான் இந்த கருத்தை நான் தெரிவித்தேன்.

நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளையும், மாநில சட்டப்பேரவைக்கான இடங்களையும் கைப்பற்றும் சதித்திட்டத்துடன் முஸ்லிம்சமுதாயத்தினர் இருக்கிறார்கள். இதற்காகவே அவர்கள் 12 முதல் 14 குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள். இப்படியே சென்றால், 2030ம் ஆண்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை இந்துக்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகரித்து விடும்.

அரசின் வளங்களை முஸ்லிம் மக்கள் சுரண்டுகிறார்கள், இந்துக்கள்தான் அதிகமான வரி செலுத்துகிறார்கள். ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும் ’’ எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

என்னை மன்னித்துவிடுங்கள்.. நான் அந்த அர்த்தத்துல பேசல..! மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்ட லலித் மோடி
எகிறிய ஏற்றுமதி.! எடுபடாத அமெரிக்க வரிகள்.! மீண்டும் நிரூபிக்கப்பட்ட மோடியின் ராஜதந்திரம்.!