பனிமூட்டத்தால் குளத்தில் கார் விழுந்து விபத்து...! 4 பேர் உயிரிழப்பு...! 4 பேர் படுகாயம்...!

Asianet News Tamil  
Published : Jan 02, 2018, 10:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
பனிமூட்டத்தால் குளத்தில் கார் விழுந்து விபத்து...! 4 பேர் உயிரிழப்பு...! 4 பேர் படுகாயம்...!

சுருக்கம்

Fleeing car collapses in the pond

ராஜஸ்தான் மாநிலத்தில் கார் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில் உள்ளது. சாலை, ரயில், விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளன. இதனால் விமான பயனிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

மேலும் 21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 24 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராஜஸ்தான் பரத்பூர் மாவட்டம் டிக் பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக கார் ஒன்று குளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

கிளப்பில் இடம் பிடிக்க தகராறு.. பெண்ணை பீர் பாட்டிலால் தாக்கிய குடிபோதை கும்பல்!
ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த ஷாக்.. எங்க ஏர்பேஸ் காலி! உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்!