"சிவன் கோயிலில் இஸ்லாமிய திருமணம்..!!!" - நெகிழ வைத்த மனிதநேயம்

 
Published : Oct 27, 2016, 02:35 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
"சிவன் கோயிலில் இஸ்லாமிய திருமணம்..!!!" - நெகிழ வைத்த மனிதநேயம்

சுருக்கம்

பீகாரில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு, இஸ்லாம் முறைப்படி சிவன் கோயிலில் திருமணம் செய்யப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது சோஹன். இவரும் நியுரிஷா காட்டூன் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

இவர்கள் இருவரது காதலுக்கும் இவர்களின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, காதல் விஷயத்தை வீட்டில் சொல்ல பயந்து வீட்டை விட்டு வெளியேற இருவரும் திட்டமிட்டனர்.

வீட்டை விட்டு வெளியேற இந்த காதல் ஜோடி, அப்பகுதியில் உள்ள சிவன் கோயிலில் இஸ்லாமிய முறைப்படி திருமண செய்ய முடிவு செய்தனர். இதற்காக ஊர் பஞ்சாயத்து தலைவர் சுதீர் குமார் சிங் மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி, சிவன் கோயிலில் திருமணம் நடந்தது.

திருமணம் செய்த இந்த காதல் ஜோடி, தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறியுள்ளது. தங்களது காதலை இணைத்த, சிவன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் தங்களது திருமண நாளின்போது செல்வோம் என்றும் அந்த காதல் ஜோடி உறுதியெடுத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
Rahul Gandhi with Messi: மெஸ்ஸியுடன் கூலாக உரையாடிய ராகுல் காந்தி.. ரசிகர்கள் ஆரவாரம்..