
காடுகளை பாதுகாத்து வருவது பழங்குடியினா் மட்டும் தான் என பிரதமர் திரு. நரேந்திர மாேடி தொிவித்துள்ளாா்.
டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் தேசிய பழங்குடியினர் விழாவை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றத்திற்கு பழங்குடியினர் ஆற்றிய பங்கு அளப்பரியது எனக் கூறினார். பழங்குடியினரே நமது காடுகளைப் பாதுகாத்து வருவதாக குறிப்பிட்ட அவர், வனங்களைப் பாதுகாப்பதென்பது பழங்குடியின கலாச்சாரத்தின் ஒரு பகுதி என தொிவித்தாா்.
பழங்குடி இன மக்களின் உரிமைகளை பறிப்பவர்கள் கடும் விளைவை சந்திக்கே வேண்டி வரும் என எச்சரித்த மோடி, சமூகத்தில் பழங்குடி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவித்தார். பழங்குடியினரின் நிலையை மேம்படுத்த முயற்சி எடுத்து வருவதாகவும், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் உறுதிபடத் தொிவித்தாா்.