தந்தை விவசாயக்கூலி.. சமஸ்கிருத தேர்வில் முதலிடம் பெற்ற முஸ்லீம் சிறுவன் - குவியும் பாராட்டுகள்.!!

Published : May 06, 2023, 06:36 PM IST
தந்தை விவசாயக்கூலி.. சமஸ்கிருத தேர்வில் முதலிடம் பெற்ற முஸ்லீம் சிறுவன் - குவியும் பாராட்டுகள்.!!

சுருக்கம்

இர்பான் என்ற முஸ்லீம் சிறுவன் சமஸ்கிருத தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் விவசாய தொழிலாளி சலாவுதீனின் 17 வயது மகன் முகமது இர்பான், உத்தரபிரதேச மத்தியமிக் சமஸ்கிருத சிக்ஷா பரிஷத் வாரியத்தின் உத்தர் மத்யமா - II (12 ஆம் வகுப்பு) தேர்வில் 82.71% மதிப்பெண் பெற்றுள்ளார். அதுவும் சுமார் 13,000 எழுதிய தேர்வில் முதலிடம் பெற்றிருக்கிறார்.

மற்ற பாடங்களுடன் சமஸ்கிருத மொழி மற்றும் இலக்கியம் இரண்டு கட்டாய பாடங்களாக தேவைப்படுகிறது. சமஸ்கிருத ஆசிரியராக ஆசைப்படும் இர்பான், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் 20 மதிப்பெண்கள் பெற்ற ஒரே முஸ்லீம் ஆவார். சிறுவன் இர்பான் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.  ஏனென்றால் அவனது தந்தை அவனை அனுப்பக்கூடிய ஒரே பள்ளி இதுதான்.  சலாவுதீன் ஒரு நாளைக்கு 300 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார்.  

இர்ஃபான் முஸ்லீம் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை அவர்கள் குழந்தை தனது கனவுகளை அடைவதை ஒருபோதும் தடுக்கவில்லை. “ஜூனியர் வகுப்புகளில் ‘சமஸ்கிருதம்’ ஒரு கட்டாயப் பாடமாக இருந்தது. அங்கிருந்துதான் அவருக்கு மொழியின் மீது விருப்பம் ஏற்பட்டது.  அவர் இப்போது BAக்கு சமமானவர் ஆக இருக்கிறார். சமஸ்கிருத ஆசிரியராக இர்பான் ஆவார் என்றார் அவரது தந்தை கூறினார். 

இதையும் படிங்க..ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

இதுபற்றி பேசிய இர்பான், “மக்கள் ஏன் ஒரு மொழியை ஒரு மதத்துடன் தொடர்புபடுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு இந்து உருது மொழியைக் கற்றுக்கொள்வதில் மிகச் சிறந்தவராக இருக்க முடியும். அதே சமயம் ஒரு முஸ்லீம் சமஸ்கிருதத்தைப் படிப்பதில் மிகச் சிறந்தவராக இருக்க முடியும். நான் கல்வியின் மதிப்பைப் புரிந்துகொண்ட ஒரு பட்டதாரி” என்று இர்பான் கூறினார்.

இதையும் படிங்க..சார்லஸ் முடிசூட்டு விழாவில் பைபிள் படித்த இந்து.. கோஹினூர் வைரம் என்னாச்சு!! இதை கவனிச்சீங்களா?

PREV
click me!

Recommended Stories

டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!