
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளரும், ஒருங்கிணைப்பாளருமான திலிப் பாண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
272 இடங்கள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில், பா,ஜனதா கட்சி 185 வார்டுகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 44 வார்டுகளில் மட்டுமே வென்று,2-ம் இடத்தையே பிடித்தது.
இதையடுத்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று மாநில ஆம்ஆத்மி கட்சியின் பொறுப்பாளரும், ஒருங்கிணைப்பாளருமான திலிப்பாண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர்டுவிட்டரில் வௌியிட்ட பதிவில், “ டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நான் ராஜினாமா செய்துவிட்டேன். இந்த தகவலை நான் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தெரிவித்துவிட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்கி கட்சியின் சார்பில்திலிப் பாண்டேயின் செயல்பாடு குறிப்பிடத்தக்க பங்காக இருந்தது. அவரின் ராஜினமா அந்த கட்சிக்கு பின்னடைவாகும்.