
சத்திஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் வீரர்கள் 24 பேர் உயர்ந்ததையடுத்து பதிலடி கொடுக்கும் வகையில் சி.ஆர்.பி.எப் வீரர்களால் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா என்ற பகுதியில் சி.ஆர்.பி.எப் படையினர் முகாமிட்டிருந்தனர். அப்போது திடீரென 300 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் 74வது படைப்பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களில் நான்கு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், இன்று சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.