
சத்திஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் வீரர்கள் 24 பேர் உயர்ந்ததையடுத்து சி.ஆர்.பி.எப் படைக்கு புதிய தலைவராக ராஜீவ்ராய் பட்நாக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா என்ற பகுதியில் சி.ஆர்.பி.எப் படையினர் முகாமிட்டிருந்தனர். அப்போது திடீரென 300 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் 74வது படைப்பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. மேலும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இந்த தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களில் நால்வர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 3 லட்சம் வீரர்களை கொண்ட சி.ஆர்.பி.எப் படைப்பிரிவுக்கு கடந்த இரு மாதங்களாக தலைவரே நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், சி.ஆர்.பி.எப் படைக்கு புதிய தலைவராக ராஜீவ்ராய் பட்நாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவராக நியமிக்கபட்டிருக்கும் ராஜீவ்ராய் பட்நாகர் 1983 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.