அடேங்கப்பா.! 100க்கு 555 மார்க் எடுத்த கல்லூரி மாணவன்.. பீகாரில் நடந்த அதிசயம் !! வைரல் ஆன மார்க்சீட் !

Published : May 03, 2022, 01:59 PM IST
அடேங்கப்பா.! 100க்கு 555 மார்க் எடுத்த கல்லூரி மாணவன்.. பீகாரில் நடந்த அதிசயம் !! வைரல் ஆன மார்க்சீட் !

சுருக்கம்

பீகாரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவில், ஒரு மாணவர் 100 மதிப்பெண்களுக்கான தேர்வில் 555 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்வில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். ஆனால் 100க்கு 555 என்றால் நம்ப முடிகிறதா ? அட, நம்பித்தான் ஆகணும்.  ஆனால் பீகாரில் உள்ள ஒரு முங்கர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு மாணவர் 100 மதிப்பெண்கள் கொண்ட தாளில் 555 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அடேங்கப்பா இப்படியொரு சம்பவமா என்று நினைத்தால், மற்றொருவர் 800க்கு 868 எடுத்து உள்ளார். இந்த செய்தி தற்பொழுது வைரலாகி வருகிறது.

இது தவறுதலாக நடந்துள்ளது என்று பல்கலைக்கழகம் கூறுகிறது. ஆனால், இந்த தவறு எப்படி நடந்தது என்று துணைவேந்தர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளரால் சரிபார்த்துதான் முடிவு  வெளியாக வேண்டும். இதில் தவறு ஏற்பட்டதால் தான் இந்தவொரு பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள். திலீப் குமார் ஷா பீகாரில் அமைந்துள்ள ஜமுய் கேகே கல்லூரியின் மாணவர் ஆவார். 

இந்த கல்லூரி முங்கர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, திலீப் ஹிஸ்டரி ஹானர்ஸ் பார்ட் 3 அதாவது பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வை வழங்கியிருந்தார். ரிசல்ட் வந்தபோது வரலாறு தாளில் 100க்கு 555 மதிப்பெண்கள் எடுத்திருப்பது தெரிந்தது.  ஆனால் இது திலீப்பிற்கு மட்டும் நடக்கவில்லை. மற்றொரு மாணவர் முழு மதிப்பெண்களை விட அதிகமாக பெற்றுள்ளார், இந்த மாணவருக்கு அவரது ஹானர்ஸ் பாடங்களில் மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு 868 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 

முங்கர் பல்கலைக்கழக பட்டமளிப்பு அமர்வு 2018-21 முடிவில் இந்த அலட்சியம் நடந்துள்ளது என்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் விசி, புரோ விசி மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்குப் பிறகு இறுதி முடிவு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. ஆனாலும் இவ்வளவு பெரிய தவறு கண்டுகொள்ளாமல் இருந்தது. இதுகுறித்து துணைவேந்தர் ஷியாம ராய் கூறும்போது, ​​‘இரண்டு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் தவறுகள் உள்ளன. 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நடந்தது. பின்னர் அது சரி செய்யப்பட்டு, திருத்தப்பட்ட முடிவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ரமாஷிஷ் பர்பேவுக்குக் காரணம் காட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக விசி தெரிவித்தார். இனிமேல் அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிடும் போது அனைத்து கவனமும் எடுக்கப்படும்’ என்றும் கூறினார். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Bandh : மே 16 முதல் 21ம் தேதி வரை பந்த்.. வெளியான அதிரடி அறிவிப்பு.! இயல்பு வாழ்க்கை பாதிக்குமா ?

இதையும் படிங்க : 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. இதை மட்டும் பண்ணிடாதீங்க.. அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!