Nita Ambani : அண்மையில் அடிக்கடி தலைப்பு செய்திகளில் வந்தது பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் தான்.
இந்திய நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தற்போது தனது அன்பு மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் அந்த திருமணத்திற்கு முந்தைய விழா பிரமாண்டமாக நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள், முக்கிய தொழிலதிபர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.
என்ன தான் இருந்தாலும் இந்த திருமண நிகழ்வில் மணமக்களுக்குப் பிறகு, அனைவரது பார்வையும் நீதா அம்பானி மீது தான் விழுந்தது என்றால் அது மிகையல்ல. நீதா அம்பானி அணிந்திருந்த உடைகள், நகைகள் மற்றும் அவரது மேக்கப், ஸ்டைலிங் என அனைத்தும் தனி ஈர்ப்பு பெற்றது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் அலங்காரமாய் வலம்வந்தார்.
மகன் ப்ரீ வெட்டிங்கில் ரொமாண்டிக் போஸ் கொடுக்கும் முகேஷ் - நீதா அம்பானி.. லேட்டஸ்ட் போட்டோஸ்..
இந்த சூழலில் அனைவர் மனதிற்கும் எழுந்த முதல் கேள்வி, நீதாவை மிகவும் அழகாக மாற்றிய மேக்கப் கலைஞர் யார்? அந்த மேக்கப் கலைஞர், கோடீஸ்வரரின் மனைவிக்கு மேக்கப் செய்து எத்தனை லட்சம் சம்பாதிக்கிறார் தெரியுமா? இதைத் தெரிந்து கொண்டால், இப்படி ஒரு வேலை கிடைத்தால் போதும் என்றே நினைக்க தோன்றும்.
பிரபல மேக்கப் கலைஞர் மிக்கி காண்டிராக்டர் தான், திருமண விழா மற்றும் பார்ட்டி என அனைத்து நிகழ்வுகளிலும் நீதா அம்பானியை அழகாக காட்டுகிறார். இந்தியாவின் மிகவும் திறமையான ஒப்பனை கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்ட மிக்கி, பல பிரபலங்களுக்கு ஒப்பனை செய்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு லட்சங்களில் அவர் சம்பளம் வாங்குகிறார்.
மிக்கி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொழுதுபோக்கு மற்றும் பேஷன் துறையில் ஒப்பனை கலைஞராக பணியாற்றி வருகிறார். பல பிரபல பாலிவுட் நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் ஒப்பனை கலைஞராக பணியாற்றியுள்ளார். மிக்கியின் வாடிக்கையாளர் பட்டியலில் நீதா அம்பானியும் உள்ளார். மிக்கி தனது ஒப்பனைத் திறமையால், நிதா அம்பானி கலந்து கொள்ளும் எந்த நிகழ்விலும் தனித்துவமாகத் தோன்றுவதை உறுதிசெய்கிறார். நீதாவின் மகள் இஷா மற்றும் மருமகள் ஷ்லோகா மேத்தா ஆகியோருக்கும் விக்கி தான் ஒப்பனை செய்கிறார்.
பிரபல மேக்கப் கலைஞர் மிக்கியின் சம்பளமும் மிக அதிகம். ஒருவருக்கு மேக்கப் செய்ய ஒரு நாளைக்கு 7.5 லட்சம் பெருகிறாராம். மும்பையில் ஒப்பனை கலைஞர் ஒருவர் வாங்கும் அதிபட்ச கட்டணம் இதுவாகும். பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன், கரீனா கபூர் கான், ஐஸ்வர்யா ராய் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு விக்கி ஒப்பனை செய்துள்ளார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒப்பனை கலைஞர்களில் இவரும் ஒருவர். நாட்டில் உள்ள பல ஐஏஎஸ் அதிகாரிகளை விட விக்கியின் சம்பளம் பல மடங்கு அதிகம்.
கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க 'இந்த' உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுங்கள்!