தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் மகன் ஆகாஷ் அம்பானி மகாசிவராத்திரியை முன்னிட்டு சோம்நாத் கோவிலுக்கு வருகை புரிந்தனர்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன், ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரான ரீ ஆகாஷ் அம்பானி ஆகியோர் சோம்நாத் கோவிலுக்கு வந்து சிவனை வழிபட்டனர்.
அவர்களை கோவில் அறக்கட்டளையின் தலைவர் லஹிரி, செயலாளர் ஸ்ரீ யோகேந்திரபாய் தேசாய் போன்றோர் வரவேற்றனர். முகேஷ் அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் தெய்வத்தின் முன் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தனர்.
முகேஷ் அம்பானி சோம்நாத் கோயில் நிர்வாகத்துக்கு ரூ.1.51 கோடி நிதி வழங்கினார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர். அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க..மதுரை டூ ஈஷா: 2 திமுக அமைச்சர்கள் மிஸ்ஸிங் - அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்ட பின்னணி இதுதானா.!