குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ. 1.5 கோடி நன்கொடை; உடன் வந்த எதிர்கால மருமகள்!!

By Thanalakshmi VFirst Published Sep 19, 2022, 10:09 AM IST
Highlights

கேரளாவில் இருக்கும் பிரபல குருவாயூர் கோவில் அன்னதானத்துக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரூ. 1.51 கோடி நன்கொடையாக வழங்கினார்.  
 

கேரளாவில் இருக்கும் பிரபல குருவாயூர் கோவில் அன்னதானத்துக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரூ. 1.51 கோடி நன்கொடையாக வழங்கினார்.  

கேரளாவில் திருச்சூரில் இருக்கும் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலுக்கு நேற்று வருகை தந்திருந்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்தார். இவருடன் இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானியும் அவரது வருங்கால மனைவியாக செய்திகள் வெளியாகி வரும் ராதிகா மெர்சன்ட்டும் உடன் வந்திருந்தனர். கோவில் அன்னதான நிதியாக 1.51 கோடி ரூபாய் நன்கொடையாகயும், செந்தாமரக்ஷன், பலராமன் ஆகிய இரண்டு யானைகளையும் வழங்கினார்.  

மேலும் படிக்க:பாதயாத்திரையின் போது ராகுல்காந்தி செய்த காரியம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

இதையடுத்து, கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'கோவில் வளாகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனை கட்டப்பட இருக்கிறது. இதற்கு உதவுமாறு அம்பானியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  அவரும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்'' என்றனர். 

கடந்த திங்கள்கிழமை ராஜஸ்தான் மாநிலம் நத்வாராவில் இருக்கும் ஸ்ரீநாத்ஜி கோவிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்து இருந்தார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்து இருந்தார். கடந்த பத்து நாட்களில் நாட்டில் இருக்கும் பிரபல மூன்று கோவில்களில் வழிபாடுகளை முகேஷ் அம்பானி செய்துள்ளார். திருப்பதி கோவிலுக்கும் தனது வருங்கால மருமகள் ராதிகாவுடன் சென்று இருந்தார். திருப்பதி கோவிலுக்கும் ரூ. 1.5 கோடி நன்கொடை வழங்கி இருந்தார். சிறப்பு அபிஷேகத்திலும் கலந்து கொண்டார். 

மேலும் படிக்க:பிரதமர் நரேந்திர மோடி : இந்தியாவின் புதிய படைப்பாற்றல் மிக்கவர் !

வரும் தீபாவளியை முன்னிட்டு டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஜி5  நெட்வொர்க்கை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

click me!