மியான்மரில் சிக்கிய இந்தியர்களை மீட்க மத்திய அரசிடம் கோரிக்கை... உறுதி அளித்தார் தமிழிசை சௌந்தரராஜன்!!

By Narendran SFirst Published Sep 18, 2022, 11:48 PM IST
Highlights

மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்தியர்களை டேட்டா என்ட்ரி பணி எனக்கூறி ஏமாற்றி மியான்மருக்கு கடத்தி சட்டவிரோத பணி செய்ய கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அவர்களை இணையதளம் வாயிலாக சட்டவிரோத பணிகளை செய்ய சொல்வதும், அதனை மறுப்பவர்களை கடுமையாக தாக்கி துன்புறுத்துவதாகவும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் பணி என்று விளம்பரம் செய்யப்பட்டு, அதன்படி தாய்லாந்து நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடி : இந்தியாவின் புதிய படைப்பாற்றல் மிக்கவர் !

அதன் பிறகு அங்கே சென்றவுடன் சட்டவிரோதமாக அவர்களை கட்டுப்பாட்டில் எடுத்து அங்கிருந்து தாய்லாந்தின் மயான்மர் எல்லையை கடக்கிறார்கள். அங்கிருந்து கடல் கடந்து தீவுகளை கடந்து மியாவடி என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இந்திய தூதரகம் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டு அதிகாரிகளிடம் பேசி வருகிறார்கள். இது தொடர்பாக இணையத்தில் பரவுகின்ற வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாதயாத்திரையின் போது ராகுல்காந்தி செய்த காரியம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

இதனை பல அரசியல் தலைவர்கள் கடுமையாக கண்டித்து, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், மியான்மரில் சிக்கியுள்ள இளைஞர்களை மீட்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பேன். இந்தியாவுக்கு வர வைப்பதற்கோ அல்லது மியான்மரிலேயே பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

click me!