ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பன்முக சிகிச்சைக்கு தனி கட்டிடம் தேவை... மத்திய அமைச்சரிடம் விஜய்வசந்த் கோரிக்கை!!

By Narendran SFirst Published Feb 1, 2023, 7:18 PM IST
Highlights

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட 140 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சர் மன்சூக் மன்டவியாவிடம் கன்னியாகுமாரி எம்பி விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட 140 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சர் மன்சூக் மன்டவியாவிடம் கன்னியாகுமாரி எம்பி விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேவைக்கு ஏற்ப படுக்கை வசதிகள் மற்றும் தேவையான கட்டிடங்கள் இல்லாததினால் உயர் மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தங்க வசதியின்றி மதுரை, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இதையும் படிங்க: சிபிஐ-க்கு ரூ.946 கோடி ஒதுக்கீடு… மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!!

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்காக பிரத்தியேக பன்முக பிரிவு மற்றும் அதற்கான கட்டிடம் வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கையை எழுப்பி இருந்தது. இந்த நிலையில் உயர் மருத்துவ சிகிச்சைக்கு தனியாக சகல வசதிகளுடன் கூடிய ஒரு பன்முக கட்டிடம் கட்ட உதவி செய்ய வேண்டும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப‌நலத்துறை அமைச்சர் மன்சூக் மன்டவியாவிடம் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்ட ‘அமிர்த காலம்’ என்றால் என்ன?

மத்திய அமைச்சர் மன்சூக் மன்டவியாவை நேரில் சந்தித்த எம்பி விஜய் வசந்த், பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரமம் (PMJVK) திட்டத்தின் கீழ் 140 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் கட்டுவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

click me!