Union budget 2023: சிபிஐ-க்கு ரூ.946 கோடி ஒதுக்கீடு… மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!!

Published : Feb 01, 2023, 06:47 PM ISTUpdated : Feb 01, 2023, 06:53 PM IST
Union budget 2023: சிபிஐ-க்கு ரூ.946 கோடி ஒதுக்கீடு… மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!!

சுருக்கம்

2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சிபிஐ-க்கு மத்திய அரசு 946 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. 

2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சிபிஐ-க்கு மத்திய அரசு 946 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பஜ்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், சிபிஐ-க்கு ரூ.946 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2023 ஆம் நிதியாண்டில் இருந்ததில் இருந்து 4.4 சதவீதத்திற்கு மேல் அதிகமாகும். செயற்கை நுண்ணறிவு, கிரிப்டோகரன்சி, டார்க்நெட் மற்றும் வழக்கமான குற்றங்களான வங்கி மோசடி வழக்குகள் மற்றும் வெளிநாடுகளில் நீதிமன்றங்களில் நடந்து வரும் உயர்மட்ட ஒப்படைப்பு வழக்குகள் போன்ற குற்றங்களை சமாளிப்பதற்கு, நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பில் ஆட்களை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2023ல் மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் என்னென்ன.? ஒரு பார்வை !!

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் தனது விவகாரங்களை நிர்வகிக்க ஏஜென்சி ரூ. 911 கோடியைப் பெற்றுள்ளது. பின்னர் அது திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ.906.59 கோடியாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஏஜென்சிக்கு ரூ.946.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ-ன் ஸ்தாபனம் தொடர்பான செலவினங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ChatGPT எதிரொலி! செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு

அரசு ஊழியர்கள், தனியார் நபர்கள், நிறுவனங்கள் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் மீதான ஊழல் வழக்குகளில் விசாரணை மற்றும் விசாரணைக்கு இது ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று பட்ஜெட் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. சிபிஐ-ன் பயிற்சி மையங்களை நவீனமயமாக்குதல், தொழில்நுட்ப மற்றும் தடயவியல் ஆதரவு பிரிவுகளை நிறுவுதல், விரிவான நவீனமயமாக்கல் மற்றும் நிலம்/அலுவலகம்/குடியிருப்பு ஆகியவற்றை வாங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களுக்கான ஏற்பாடுகளும் இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்
மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!