டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்... மதுரை எய்ம்ஸ்-க்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததற்கு கண்டனம்!!

By Narendran SFirst Published Feb 1, 2023, 5:00 PM IST
Highlights

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதை அடுத்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, அங்கு பிரதமர் மோடி, கடந்த 2019 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார்.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2023ல் மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் என்னென்ன.? ஒரு பார்வை !!

அதன் பின்னர் அங்கு மருத்துவமனை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்காததால் பணிகள் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: புதிய இந்தியாவுக்கான முக்கியமான பட்ஜெட்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புகழாரம்

அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுக்குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஜய்வசந்த், செல்லக்குமார், ஞானதிரவியம்,  சு.வெங்கடேசன், நவாஸ்கனி ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்கள் கைகளில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல் ஏந்தி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

click me!