ஜம்மு காஷ்மீரில் குல்மார்க் பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு; இருவர் மாயம்!!

By Dhanalakshmi GFirst Published Feb 1, 2023, 3:44 PM IST
Highlights

ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற பனிச்சறுக்கு சுற்றுலா தலமான குல்மார்க்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் சுற்றுலாப் பயணிகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவரை காணவில்லை.  

பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த 19 வெளிநாட்தினர் மீட்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது. அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

"குல்மார்க்கில் உள்ள புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டான ஹபத்குத் அபர்வத் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. பாராமுல்லா காவல்துறை மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது" என்று பாரமுல்லா காவல்துறை ட்வீட் செய்துள்ளது.

ஜனவரி 29ஆம் தேதி, லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் பனிச்சரிவில் சிக்கி ஒரு பெண் மற்றும் ஒரு இளம்பெண் உயிரிழந்தனர்.

Rescue ops at Gulmarg avalanche, Baramulla police teams along with others on job.Sofar 19 foreign nationals have been rescued successfully
Deadbodies of 2 foreign nationals recovered being shifted to hospital for medicolegal procedures. pic.twitter.com/GetUIrbPPG

— Baramulla Police (بارہمولہ پولیس) (@BaramullaPolice)
click me!