இனி இதுதான் ஆந்திராவின் தலைநகரம்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது குவியும் புகார்கள் - பின்னணி என்ன?

Published : Jan 31, 2023, 06:37 PM ISTUpdated : Jan 31, 2023, 06:39 PM IST
இனி இதுதான் ஆந்திராவின் தலைநகரம்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது குவியும் புகார்கள் - பின்னணி என்ன?

சுருக்கம்

ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014 அம் ஆண்டு பிரிகப்பட்டது. தெலுங்கானா தலைநகரமாக ஐதராபாத் மாறியது. இதனால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலை உருவானது.

இதையடுத்து, ஆந்திராவுக்கு குண்டூர் - விஜயவாடா இடையே மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார்.அமராவதியில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவை அமைக்கப்பட்டு, அங்கேயே சில பேரவைக் கூட்டங்களும் நடைபெற்றன.

பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் அமைந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.  இதன் தொடர்ச்சியாக, அமராவதிதான் ஆந்திரா தலைநகரமாக இருக்க வேண்டும் எனக் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமராவதிதான் ஆந்திராவின் தலைநகரமாக இருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

இதையும் படிங்க..அரசியலை விட்டு விலக நான் தயார்.. ஒரிஜினல் வீடியோ இருக்கு! திமுகவுக்கு சவால் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1956-ல் ஆந்திரா மெட்ராஸில் இருந்து பிரிக்கப்பட்டபோது கர்னூல்தான் அதன் தலைநகராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விசாகப்பட்டினத்தை ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அவர் அறிவித்திருக்கிறார். இன்று டெல்லியில் நடந்த சர்வதேச தூதரக கூட்டணி கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவிக்கையில், வரும் நாட்களில் எங்கள் தலைநகராக இருக்கும் விசாகப்பட்டினத்திற்கு இதோ உங்களை அழைக்கிறேன்.

வரும் மாதங்களில் நானும் விசாகப்பட்டினத்திற்கு மாறுவேன். மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை நாங்கள் அங்கு ஏற்பாடு செய்கிறோம் என்று தெரிவித்தார்.  ஆந்திராவில் முதலீடு செய்த அனைவருக்கும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நன்றி தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகள் அமைக்க அரசு சார்பில் எந்த விதமான ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தார்.

இந்த நிலையில் ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினம் அறிவித்து இருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.  புதிய தலைநகர் அமைவதற்கான இடம் குறித்து முன்கூட்டியே அறிந்து நிலங்களை ஆளும் கட்சியினர் வாங்கி குவித்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டி உள்ளது ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க..டேய் எப்புட்றா.. நாம் தமிழர் கட்சியில் இணைய திருமகன் ஈவெரா என்னை சந்தித்தார் - சீமான் பரபரப்பு பேச்சு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!