பெற்ற தாயே 3 வயது குழந்தையை சுட்டு வீழ்த்திய கொடுமை..!

Published : Nov 10, 2018, 05:31 PM ISTUpdated : Nov 10, 2018, 05:33 PM IST
பெற்ற தாயே 3 வயது குழந்தையை சுட்டு வீழ்த்திய கொடுமை..!

சுருக்கம்

ராம்பூரில் வசிக்கும் கவிதா என்ற பெண் தன்னுடைய மூன்று வயது மகளை சுட்டுக்கொன்றுவிட்டு தன்னை தானே சுட்டுக்கொண்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராம்பூரில் வசிக்கும் கவிதா என்ற பெண் தன்னுடைய மூன்று வயது மகளை சுட்டுக்கொன்றுவிட்டு தன்னை தானே சுட்டுக்கொண்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சம்பவத்தன்று, கவிதா என்ற பெண் தனது மூன்று வயது குழந்தையை தன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே துப்பாக்கியால் சுட்டுக்கொன்று உள்ளார். பின்னர் தன்னையும் அதே துப்பாகியால் சுட்டுக்கொண்டு இறந்தார்.

சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்து பார்க்கும் போது குழந்தை மற்றும் தாய் இருவரும் இறந்துக்கிடந்த காட்சியை பார்த்து அதிர்ந்து உள்ளனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில், அப்போது கவிதாவின் மாமியார் அதே வீட்டிற்குள் இருந்துள்ளார்.மேலும் கவிதா இறப்பதற்கு முன் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தான் இந்த காரியத்தை செய்து உள்ளார்.

எனவே, கவிதா எதற்காக இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்தார்..? குழந்தையை கொள்ள வேண்டிய அவசியம் என்ன...? கவிதாவின் மாமியார் கொடுமை இருந்ததா என பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"