காலை 7 மணி முதல் இரவு 7 வரை நைட்டி அணிந்தால் அபராதம்..! ரவுசு செய்யும் "மூதாட்டிகளிடம்" அதிகாரிகள் துருவி துருவி விசாரணை..!

By thenmozhi gFirst Published Nov 9, 2018, 5:12 PM IST
Highlights

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை, பெண்கள் நைட்டி அணிந்து தெருவில் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற வித்தியாசமான முடிவை எடுத்து  அதை அமலிலும் வைத்துள்ளது ஒரு கிராமம்.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை, பெண்கள் நைட்டி அணிந்து தெருவில் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற வித்தியாசமான முடிவை எடுத்து  அதை அமலிலும் வைத்துள்ளது ஒரு கிராமம்.

மேற்கு கோதாவரி மாவட்டம் தோகலாப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் பெண்கள், எல்லோரையும் போல அணிவதற்கு மிகவும் வசதியாக உள்ள நைட்டியை தேர்வு செய்கின்றனர். இது மற்ற இடங்களில்  சாதரணமாக பார்க்கப்பட்டாலும் இந்த கிராமத்தில் மட்டும் மிகவும் சீரியசாக பார்க்கப்பட்டு உள்ளது. 
அதாவது, அந்த ஊரில் வசிக்கும் பெரியவர்கள் அதில் குறிப்பாக மூதாட்டிகள் ஒன்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.

அதன் படி, 

பெண்கள் கடைகளுக்கும், பிற பகுதிகளுக்கும் செல்லும் போது நைட்டி அணிந்து செல்வது மிகவும்  அநாகரிகமாக தோன்றுகிறது என்பதால் இந்த முடிவை அந்த ஊர் மூதாட்டிகள் ஒன்று சேர்ந்து   எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் தடையை மீறி பகல் நேரத்தில் நைட்டி அணிந்தால் அவர்களிடமிருந்து அபராதமாக ரூ. 2000  வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த முறை கடந்த ஆறு மாத காலமாக அமலில்  இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த விவகாரம் தீபாவளியன்று, வெளி உலகிற்கு தெரிய வரவே இந்த புதிய திட்டம் குறித்து விசாரணை செய்ய அந்த கிராமத்திற்கு அதிகாரிகள் சென்று உள்ளனர். ஆனாலும் இது தொடர்பாக எந்த  புகாரும் அவர்களிடம் பெண்கள் தெரிவிக்கவில்லையாம்.. காரணம் இந்த முறையை அந்த ஊர் பெண்கள்  வரவேற்பதாக தெரிகிறது 

மேலும் நைட்டி அணிவது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டாலோ அல்லது தண்டனை ஏதாவது வழங்கப்பட்டாலோ தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் அந்த ஊர் பொதுமக்களிடம்  தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று உள்ளனர்.
 

tags
click me!