பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்..! திட்டம் போட்டு தீத்து கட்டிய தாய்...!

 
Published : May 13, 2018, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்..! திட்டம் போட்டு தீத்து கட்டிய தாய்...!

சுருக்கம்

mother murder for her son in patna

பீகார் மாநிலத்தில் ரேணுதேவி என்பவர், பெற்ற மகனையே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவில் ரேணுதேவி என்பவர் தன்னுடைய மகன் மின்டுராமுடன் வசித்து வந்துள்ளார். மின்டுராமுவிற்கு திருமணமாகி, அஞ்சுதேவி என்கிற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

மின்டுராம் திருமணத்திற்கு பிறகும், வீட்டின் அருகே வசித்து வந்த இளம் பெண்களை கிண்டல் செய்தது மட்டும் இன்றி, ஒரு சிலருக்கு பாலியம் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதனை பல முறை மின்டுவின் தாயிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளனர். மின்டுவை ரேணுவும் பல முறை கண்டித்தும் பலன் இல்லை எனக் கூறப்படுகிறது.

அதேப்போல் மின்டு, பலரிடம் கடன் வாங்கி அதனை ஊதாரித் தனமாக செலவு செய்துள்ளார். இப்படி இவர் வாங்கிய கடன்களையும்  ரேணுதான் கஷ்டப்பட்டு உழைத்து அடைத்துள்ளார்.

மின்டு தொடர்ந்து இப்படி பல பிரச்சனைகள் கொடுத்து வந்தது குறித்து தாய் ரேணு கேட்டால் குடித்து விட்டு வந்து தகாத வார்த்தைகளால் பேசி அவரையும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் ஒரு நிலையில் மனமுடைந்து போன தாய் ரேணு. இவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டம் போட்டார். அதன்படி அந்த பகுதியில் வசித்து வரும் தரம் வீர், சரவண் குமார் ஆகியோருக்கு 50,000 ஆயிரம் பணத்தை கொடுத்து தனது மகனை கொலை செய்து விடுமாறு கூறியுள்ளார்.

இவர்களும் மின்டு ராமை கொலை செய்து, அவருடைய உடலை புதருக்குள் வீசி சென்று விட்டனர். 

இவர் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து, போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தாய் ரேணு முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்து வந்ததால் அவரை தீவிரமாக விசாரித்து வந்தனர்.

ஆரம்பத்தில் பொய் தகவலை தெரிவித்த இவர். ஒரு கட்டத்தில் தன்னுடைய மகனை கூலிப்படையை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

இதைதொடர்ந்து ரேணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலை செய்த கூலிப்படை ஆட்களையும் தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!
மகாராஸ்டிரா உள்ளாட்சி தேர்தலிலும் அடித்து தூக்கிய பாஜக..! உத்தவ், சரத் பவார் மொத்தமா காலி