இது என்ன கொடுமை... மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பி விட்ட மாமியார்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 03, 2021, 06:40 PM IST
இது என்ன கொடுமை... மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பி விட்ட மாமியார்...!

சுருக்கம்

தெலங்கானாவில் மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பிய மாமியாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ராஜன்ன சிறிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண், தன்னுடைய கணவர் வேறு மாநிலத்தில் ஆட்டோ ஓட்டி வருவதால், ஐதராபாத்தில் உள்ள மாமியார் வீட்டில் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வீட்டிலேயே தனி அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். 

தனிமைப்படுத்தப்பட்ட மாமியாரிடம் இருந்து மருமகள் சமூக இடைவெளியை கடைபிடித்து வந்துள்ளார். தனி அறையில் இருக்கும் அவருக்கு தூரமாக இருந்து உணவு கொடுப்பது, பிள்ளைகளை பாட்டியிடம் போக வேண்டாம் என சொல்லியது ஆகியன மருமகள் மீது கோபத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாமியார் மருமகளை கட்டிப்பிடித்து கொரோனா தொற்றை பரப்பியுள்ளார். 

தாய் மூலமாக அவருடைய 2 குழந்தைகளும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இப்படிப்பட்ட கொடூரத்தை செய்த பிறகும் கோபம் தனியாத மாமியார், மருமகளை தன்னுடைய பேரக்குழந்தைகளுடன் சேர்த்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். தற்போது அந்த பெண் தன்னுடைய குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேண்டுமென்றே கொரோனா பரப்பிய மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பெருந்தோற்றால் கொத்து, கொத்தாக மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நேரத்தில் மாமியார் தன்னுடைய மருமகள் மீதான கோபத்தில் இப்படியொரு காரியத்தை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்