கொரோனா இல்லா கிராமம் போட்டி... அரசு அறிவித்துள்ள பரிசுத்தொகை எத்தனை லட்சம் தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Jun 2, 2021, 6:07 PM IST
Highlights

கொரோனா 3வது அலையில் இருந்து மக்களை தற்காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில் மகாராஷ்டிரா அரசு கிராம பஞ்சாயத்துக்களுக்குள் ஒரு போட்டியை அறிவித்துள்ளது.  

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை தொடங்கியது இருந்து மகாராஷ்டிரா மாநிலம் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் மகாராஷ்டிரா அரசு திண்டாடியது. தற்போது கொரோனா 3வது அலை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. 

கொரோனா 3வது குழந்தைகளை தாக்கும் என்ற எச்சரிக்கை எழுப்பப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் மட்டும் ஒரே மாதத்தில் 8,000 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சாங்கிலி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா 3வது அலையில் இருந்து மக்களை தற்காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில் மகாராஷ்டிரா அரசு கிராம பஞ்சாயத்துக்களுக்குள் ஒரு போட்டியை அறிவித்துள்ளது.  "கொரோனா இல்லா  கிராமம்" என்ற போட்டியில் கொரோனா இல்லாத கிராமத்திற்கு பெரும் தொகை பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு வருவாய் பிரிவிலும் கொரோனா நிர்வாகத்தில் நல்ல வேலை செய்யும் மூன்று கிராம பஞ்சாயத்துகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ .50 லட்சமும், இரண்டாவது ரூ .25 லட்சமும், மூன்றாவது ரூ .15 லட்சமும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!