
இந்தியாவில் இருந்து வெளியேறி வெளிநாடுகளுக்கு சென்று குடியேற எண்ணுபவர்கள் பட்டியலில் நம் நாடு 2வது இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 1.3 % வயதில் மூத்தவர்கள் வெளிநாட்டுக்கு சென்று நிரந்தரமாக குடியேற திட்டமிட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி மற்றும் தென் ஆப்ரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ளனர் என்று ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் குடியேற திட்டமிடுபவர்களின் பட்டியலில் முதலிடத்தில் நைஜீரியா உள்ளது என்றும் . தொடர்ந்து, இந்தியா, காங்கோ, சூடான், வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன.
இந்தியாவில் 48 லட்சம் பேர் வெளிநாட்டில் குடியேற எண்ணியுள்ளதாகவும், அவர்களில் 35 லட்சம் பேர் இதற்கான திட்டங்களில் இறங்கியுள்ளதாகவும், 13 லட்சம் பேர் தயாராகி கொண்டிருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நைஜீரியாவில் 51 லட்சம் பேரும், காங்கோவில் 41 லட்சம் பேரும், சீனா மற்றும் வங்கதேசத்தில் தலா 27 லட்சம் பேரும் வெளிநாட்டில் குடியேற திட்டமிட்டனர் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..