Morgan Stanley: பிரபல நிறுவன துணைத் தலைவரின் தீரம்! செல்போன் திருடனை துரத்திப்பிடித்து போலீஸில் ஒப்படைப்பு

By Pothy RajFirst Published Dec 3, 2022, 3:17 PM IST
Highlights

மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் துணைத் தலைவர் தன்னிடம் இருந்து செல்போன் பறித்துச்சென்ற திருடனை மும்பையின் பரபரப்பான சாலைக்குள் துரத்திப்பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தார்.

மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் துணைத் தலைவர் தன்னிடம் இருந்து செல்போன் பறித்துச்சென்ற திருடனை மும்பையின் பரபரப்பான சாலைக்குள் துரத்திப்பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தார்.

மும்பையில் உள்ள மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருப்பவர் சுதான்ஸு நிவ்சார்கர்(வயது41). மும்பையின் சான்டிவாலி பகுதியில் சுதான்ஸு குடியிருந்து வருகிறார். கடந்த புதன்கிழமை தனது வேலைமுடித்து ஹப்மால் பகுதியில் ஒரு வாடகை ஆட்டோவைப் பிடித்து வீட்டுக்கு  திரும்பினார்.

சீன இறக்குமதி எலெக்ட்ரிக் பேன், ஸ்மார்ட் மீட்டர்களுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு முடிவு

அப்போது, ஜோகேஸ்வரி விக்ரோலி லிங்க் பகுதி சாலையில் ஆட்டோவந்தபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஆட்டோவில் அமர்ந்திருந்த சுதான்ஸு தனது இடதுகையில் செல்போனை வைத்திருந்தார். அப்பகுதியில் நோட்டமிட்டிருந்த ஒரு திருடன் திடீரென சுதான்ஸு கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடத்தொடங்கினார்.

இதனால் திகைத்துப்போன சுதான்ஸு சுதாரித்துக்கொண்டு, தனது செல்போன் பறித்த திருடனை விரட்டத் தொடங்கினார். அந்த சாலை மிகவும் பரபரப்பான, நெருக்கடி மிகுந்ததாக இருந்தபோதிலும் திருடனை விரட்டிக்கொண்டே டிப்டாப்அதிகாரி சுதான்ஸு ஓடியதை மக்கள் வியப்பாகப் பார்த்தனர்.

ஒரு கட்டத்தில் திருடனை சுதான்ஸு பிடித்தநிலையில் அவரை கீழே தள்ளிவிட்டு திருடன் ஓடத் தொடங்கினார். ஆனாலும், சுதான்ஸு தனதுவிடாமுயற்சியை கைவிடவில்லை. மறுபடியும் எழுந்து ஓடத் தொடங்கி திருடன், திருடன் என சத்தம்போட்டுக்கொண்டே ஓடினார். இதைப் பார்த்த சாலையில் சென்ற மக்கள் அந்த திருடனை மடக்கிப் பிடிக்க சுதான்ஸுக்கு உதவினர். 

:இந்தியாவில் வேலையின்மை 3 மாதங்களில் இல்லாத அளவு 8 சதவீதமாக நவம்பரில் அதிகரிப்பு:சிஎம்ஐஇ கணிப்பு

திருடனை பிடித்தவுடன் சுதான்ஸு உடனடியாக மும்பை பெருநகர போலீஸ்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். போவை காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து திருடனை பிடித்துச் சென்றனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தத் திருடன் பெயர் சாகர் தாக்கூர் என்பதும், போவை பகுதியில் சாகி விஹார் சாலையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில் “ சுதான்ஸு நிவ்சர்கார் அளித்த புகாரின்படி சாகர் தாக்கூரை கைது செய்துள்ளோம்.அவர் மீது வழிப்பறி வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளாரா என்றும் விசாரித்து வருகிறோம்”எனத் தெரிவித்தனர்


 

click me!