ரூ.251 ஸ்மார்ட்போன் மோகித் கோயல் 8-ம்வகுப்பு பெயிலாம் - திடுக் தகவல்கள்

First Published Feb 25, 2017, 6:05 PM IST
Highlights


ரூ. 251-க்கு ஸ்மார்ட்போன் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு கைதான மோகித் கோயல் 8-வது கூட தேறாதவர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால்,நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் மோகித் கோயல், தான் எம்.பி.ஏ. முடித்தவர் என்று பொய்களை அள்ளிவிட்டுள்ளார்.

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வழங்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்து ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் கோயல் பரபரப்பை உண்டாக்கினார். இந்த ஸ்மார்ட்போனையும் பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து, 7 கோடி பேர் இந்த ஸ்மார்ட் போனுக்கு முன்பதிவு செய்தனர், ஏறக்குறைய 70 ஆயிரம் ஸ்மார்ட்போன் அனுப்பி வைக்கப்பட்டது.

மிரட்டல்

இதில், காசியாபாத்தை சேர்ந்த அயம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் செலுத்திய  பணத்துக்கு ஸ்மார்ட் போன் அனுப்பி வைக்காமல்ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தலைவர் மோகித் கோயல் மோசடியில் ஈடுபட்டார் என புகார் எழுந்தது.

மோசடி

இதையடுத்து, அயம் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் காசியாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மோகித் கோயல், அவரின் சகோதரர் அன்மோல் கோயல் கூட்டாளிகள் தர்னா கார்க், அசோக் சதா, சுமித்குமார் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.

இந்நிலையில் மோகித் கோயலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “ உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டதைத் சேர்ந்த மோகித் கோயல் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மோகித் கோயல், ஆஸ்திரேலியாவின் அமிட்டி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதுநிலைபட்டமும், சிட்னி பல்கலைகழகத்தில் பி.பி.ஐ. இளங்கலை படித்ததாகவும் கூறியிருந்தார்.

இவரிடம் விசாரணை நடத்தியதில் இவர் எட்டாம் வகுப்பு கூட தேறவில்லை. ஆங்கிலம் பேசும் அறிவை மட்டும் வளர்த்துக்கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளார்.

தனது நிறுவனத்தை தொடங்கி செய்தித்தாளையும், செல்போனையும் ஒப்பிட்டு பேசி மக்களை ஏமாற்றி இருக்கிறார். ஒரு செய்தித்தாள் தயாரிக்கும் செலவு ரூ.82 ஆகிறது, ஆனால், மக்களுக்கு ரூ.3க்கு கொடுக்கிறார்கள். எப்படி சாத்தியமோ அதுபோலவே எனது ஸ்மார்ட்போனும்சாத்தியம். நான் சீனா, தைவானில் இருந்து செல்போன்களை இறக்குமதி செய்வதால், எனக்கு ரூ.251க்கு கொடுக்க முடிகிறது என்று கூறி ஏமாற்றியுள்ளார்.இவரின் வார்த்தையை நம்பி 25 லட்சம் பேர் பணம் கொடுத்து முன்பதிவு செய்தனர'' என தெரிவித்தனர்.

click me!