இது கையா.. இரும்பு சம்மட்டியா? - ஒரு நிமிடத்தில் 124 தேங்காய்களை வெறும் கையால் உடைக்கும் இளைஞர்

First Published Feb 25, 2017, 4:48 PM IST
Highlights


ஒரு நிமிடத்துக்குள் 124 தேங்காய்களை வெறும் கையால் உடைத்து கேரளாவைச் சேர்ந்த இளைஞர் சாதனை புரிந்துள்ளார். இவரின் சாதனை விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

மெக்கானிக்

கேரள மாநிலம், கோட்டயம், பூஞ்சார் பகுதியைச் சேர்ந்தவர் அபீஸ் டோமினிக்(வயது25). மோட்டார் மெக்கானிக்காக பணி புரியும்டோமினிக்குக்கு அவ்வப்போது வித்தியாசனமான சாதனைகளைச் செய்து காட்டுவதில் அலாதி பிரியம்.

பல சான்றுகள்

இதற்கு முன் அபீஸ் கடினமான ஹாக்கி விளையாட்டு ஸ்டிக்கையும்,  ஹெல்மெட்டையும் வெறும் கைகளால் உடைத்துள்ளார், பற்களால் ஒரு பஸ்ஸை கயிற்றால் கட்டி, 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளார், நிமிடத்துக்கு 2000 ஆர்.பி.எம். வேகத்தில் சுற்றும் காற்றாடியை தனது நாக்கால்  பிடித்து நிறுத்தி சாதனை புரிந்துள்ளார்.

இதற்காக யுனிவர்சல் ரெக்கார்டு பாரம்(யு.ஆர்.எப்.), லிம்கா புக் ஆப் ரிகார்ட்ஸ், அமெரிக்கன் செட்டர் ரிக்கார்ட் ஆகிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று, சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.

சாதனை

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், கோட்டயத்தில் ஒரு ஷாப்பில் மாலில் அபீஸ் ஒரு சாதனை நிகழ்த்தினார். அதாவது ஒரு நிமிடத்துக்குள் 124 தேங்காய்களை வெறும் கைகளால் அபீஸ் உடைத்து புதிய சாதனை படைத்தார்.

145 தேங்காய்கள்

போட்டி தொடங்கிய உடன் கண் இமைக்கும் நேரத்தில் வரிசையாக வைக்கப்பட்டு இருந்த தேங்காய்களை தனது வலுவான வலதுகையால்அபீஸ் அடித்து உடைத்து எறிந்தார். ஒட்டுமொத்தமாக 145 தேங்காய்களை உடைத்தார். அதில் சரிபாதியாக நன்றாக 124 தேங்காய்கள் உடைந்து இருந்ததால், அதுவே கணக்கில் கொள்ளப்பட்டது.

இதற்கு முன்

இதற்கு முன், ஜெர்மனியைச் சேர்ந்த முகம்மது கரிமாநோவிக் என்ற இளைஞர் ஒரு நிமிடத்துக்குள் 118 தேங்காய்களை வெறும் கைகளால் உடைத்து சாதனை படைத்து இருந்தார். இதை முறியடித்துள்ளார் அபீஸ். இவரின் சாதனை குறித்த வீடியோ, ஆவணங்கள் கின்னஸ் அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதால், விரைவில் சாதனையாளராக அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

நம்பிக்கை

இது குறித்து அபீஸ் டோமினிக் கூறுகையில், “ கின்னஸ் சாதனை புத்தகத்தில் நான் இடம் பெறுவேன் என நம்புகிறேன். ஏற்கனவே நான் 3 சாதனைகளைச் செய்து சான்றிதழ் பெற்றுள்ளேன். ஹாக்கி ஸ்டிக், ஹெல்மெட் ஆகியவற்றை வெறும் கைகளால் உடைத்து இருக்கிறேன், 2000 ஆர்.பி.எம். வேகத்தில் ஓடும் காற்றாடியை என் நாக்கால் கயிறு மூலம் கட்டி நிறுத்தி இருக்கிறேன். இந்த சாதனை குறித்து நான் கின்னஸ் அமைப்புக்கு அனுப்பி இருக்கிறோம் விரைவில் இடம் பெறுவேன்'' என்றார்.

click me!