
ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு நடக்க உள்ள பார்லிமென்ட் விசேஷ கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்க்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே பெரும் ஆட்சி போர் நடைபெற்று வருகிறது.
எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும் அரசியல் ரீதியாகவும், கொள்கைகள் ரீதியாகவும் மாறுபட்டாலும் நேரில் சந்தித்து கொள்ளும்போது பேசி கொள்வது மரபு. ஆனால் பாஜகவும் காங்கிரசும் பல முரன்பாடுகளை முன்வைத்து வந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ரூபாய் நோட்டு விவகாரம் மாபெரும் நிர்வாக தோல்வி என குறிப்பிட்டார்.
ஆனாலும், பின்னர், நடைபெற்ற உத்திரபிரதேச மாநில தேர்தலில் பாஜகவே பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஜிஎஸ்டி அமல் என இரண்டு விஷயங்களை மத்திய அரசு சந்தித்து வருகிறது.
ஜிஎஸ்டி, வரும் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான சிறப்பு கூட்டம் ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோருக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அழைப்பு விடுத்துள்ளார்.