"ஊழல்வாதிகள் தூக்கமின்றி தவிக்கின்றனா்" : பிரதமர் மோடி விமர்சனம்!

Asianet News Tamil  
Published : Nov 15, 2016, 12:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
"ஊழல்வாதிகள் தூக்கமின்றி தவிக்கின்றனா்" : பிரதமர் மோடி விமர்சனம்!

சுருக்கம்

ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்யப்பட்ட அறிவிப்பால் ஊழல்வாதிகள், வரி ஏய்ப்பவர்கள் தூக்கமின்றி தவிப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் காஸிப்பூர் நகரில் ரயில்வே திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். பின்னா் உரையாற்றிய அவா், 1965ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டிய வீர் அப்துல் ஹமீத் பிறந்த இந்த மண்ணிற்கு தலைவணங்குவதாகவும், விவசாயிகளுக்காக மிகவும் மதிப்பு வாய்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் தொிவித்தாா்.

மேலும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததன் மூலம் ஏழைகள் நிம்மதியாக தூங்கும் அதேவேளை செல்வந்தர்கள் பலர் நிம்மதியின்றி தூக்க மாத்திரையை தேடி ஓடுவதாகவும், முகத்திற்கு முன்னால் பேச தைரியமில்லாத சிலர் முதுகிற்கு பின்னால் தனக்கெதிராக பேசி வருவதாகவும் அவர் சூசகமாக விமர்சித்தார்.

PREV
click me!

Recommended Stories

பீச்சுக்கு வர்றது காத்து வாங்கவா.. இல்ல ஷாப்பிங் பண்ணவா? மெரினா கடைகளுக்கு 'செக்' வைத்த நீதிபதிகள்!
திருப்பதி லட்டு விற்பனையில் சாதனை! டேஸ்டை கூட்டியதால் ஒரே ஆண்டில் 13.5 கோடி லட்டுகள் விற்பனை!