
எல்லைப்பகுதியில் நமது எதிரிகளுடன் போரிடும் இந்திய வீரர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாதந்தோறும் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே உரையாற்றுவார்.
அதன்படி இன்று நடைபெற்ற ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி,
வறுமை, கல்வியறிவு, சமூக கொடுமைகள் போன்ற இருள் நீங்குவதற்கான முயற்சிக்கான செய்தியை தீபாவளி விளக்குகள் எடுத்துக்கூறுகின்றன. தீபாவளி இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதால், இந்த பண்டிகை மக்களை ஒன்றிணைக்கும் பண்டிகையாக திகழ்வதாகக் கூறி, நாட்டு மக்களுக்கு மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் நமது வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறும் பண்டிகையாக கொண்டாடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘சந்தேஷ்’ திட்டத்துக்கு கிடைத்துள்ள அபார வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த மோடி,
ராணுவம், பிஎஸ்எப், சிஆர்பிஎப் வீரர்களின் தியாகங்கள் நமது மனதை தொடும் அவர்களை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம். நமது வீரர்களை நினைவுபடுத்த வேண்டிய நேரம் இது. நமக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு தலை வணங்குவதாக மோடி தெரிவித்தார்.
நாம் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் நமது வீரர்கள், நம்மையும், நமது நாட்டையும் பாதுகாக்கின்றனர்.
அவர்களின் தியாகத்துக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்ப்பணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.