
மூழ்கும் கப்பலில் பயணித்தால் கரை சேர முடியாது…காங்கிரஸை கலாய்த்த மோடி…
காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல் என்றும்அதில் பயணித்தால் கரை சேர முடியாது என்று பஞ்சாப் மாநில தேர்தல்பிரசாரத்தின் போது ல் பிரதமர் மோடி பேசினார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், அகாலிதளம்பா.ஜ.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில் அம்மாநிலத்தின் ஜலந்தர் நகரில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசாரப் பொதுக் கூட்டத்தில் மோடியும், அகாலிதள தலைவரும்,முதலமைச்சருமான பிரகாஷ்சிங் பாதலும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசியமோடி,காங்கிரஸ் கட்சிஎன்பது ஒரு கடந்த கால விஷயம். அதை பஞ்சாப் மக்கள் நம்பக்கூடாது.அந்த கட்சி, ஒரு மூழ்கும் கப்பல். அதில் யாரும் பயணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், கரைக்கு போய்ச்சேர முடியாத என கலாய்த்தார்..
காங்கிரஸ் கட்சி, தண்ணீரை போன்றது என்றும் தண்ணீரை எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும், அந்த பாத்திரத்தின் வடிவத்தைஅடைவது போல், காங்கிரசும் தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் என்று பேசினார்.
காங்கிரஸ் ஒரு வினோதமான கட்சி. மேற்கு வங்காளத்தில் தாக்குப்பிடிப்பதற்காக தனது நிலையை மறந்து,இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளது என்றும் இடதுசாரிகள் கொடுத்த சீட்டுகளை மனப்பூர்வமாகஏற்றுக்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சியை எதிர்த்து வந்த காங்கிரஸ் கட்சி. இப்போது அந்த கட்சியுடன் கூட்டுவைத்துக்கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதம்தான், காங்கிரசின் குணம் என்றும் பேசினார். இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் நிலைபாடுகளை கேலி செய்தார்.
அதே நேரத்தில் 70 ஆண்டுகளாக சீரழிவு அரசியலின் விளைவுகளை இந்தியா அனுபவித்து வந்தது என்றும் தற்போதுதான் வளர்ச்சி அரசியலை தொடங்கி உள்ளதாகவும் மோடி தெரிவித்தார்..