தமிழனுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்! இந்தியாவுக்கான ஐ.நா.சபையின் நல்லெண்ண தூதராக அசோக் அமிர்தராஜ் நியமனம்!...

First Published Jan 28, 2017, 6:37 AM IST
Highlights


தமிழனுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்! இந்தியாவுக்கான ஐ.நா.சபையின் நல்லெண்ண தூதராக அசோக் அமிர்தராஜ் நியமனம்!...

இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நல்லெண்ண தூதராக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரர் அசோக் அமிர்தராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டு வீரரும், நேசனல் ஜியாகிரபிக் திரைப்பட நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான அசோக் அமிர்தராஜ் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

ஹாலிவுட் திரைப்படம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை அசோக் அமிர்தராஜ் தயாரித்துள்ளார்.

புதியவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கேட்வே என்ற நிகழ்ச்சியையும் சோனி (Sony PIX)தொலைக்காட்சியில் நடத்தியுள்ளார்.

தமிழில் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார் அசோக் அமிர்தராஜ். 

இந்நிலையில் இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நல்லெண்ண தூதராக அசோக் அமிர்தராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதனை ஏற்றுக்கொண்ட அசோக் அமிர்தராஜ், தான் பிறந்த நாட்டிற்கு சேவை செய்ய மிகப்பெரிய வாய்ப்பாக இதை கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

 

click me!