பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சிறிசேனா சந்திப்பு

First Published Oct 17, 2016, 5:27 AM IST
Highlights


கோவாவில் நடந்து வரும் பிரிக்ஸ்-பிம்ஸ்டெக் மாநாட்டில்  பங்கேற்க வந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் மோடியை இன்று சந்தித்துப் பேசினார். 

கோவாவில் “பிரிக்ஸ்-பிம்ஸ்டெக்” மாநாடு நடந்து வருகிறது. இதில் பிம்ஸ்டெக் நாடுகளின் உறுப்பினராக இலங்கை நாடு உள்ளது. 

இதில் பங்கேற்க அந்நாட்டு அதிபர் சிறிசேனா வந்துள்ளார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துபின், பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினர்.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட்டரில் கூறுகையில், “ பிம்ஸ்டெஸ் மாநாட்டில் பங்கேற்க வந்த இலங்கை அதிபர் சிறிசேனாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். 

அப்போது இருநாடுகள் தரப்பில் வர்த்தகம், நட்புறவு,  பாதுகாப்புதுறை, பொருளாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். மீனவர்கள் பிரச்சினை, தீவிரவாத அச்சுறுத்தல் குறித்தும் ஆலோசித்தனர்” என்று தெரிவித்தார். 

மேலும், சமீபத்தில் உரி ராணுவமுகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, இஸ்ஹாமாபாதில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. 

இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையும் பங்கேற்பை புறக்கணித்த து இதற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இரு நாட்டு மீனவர் பிரச்சினை, தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஆகிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.  

click me!