"பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்": நவீன் பட்நாயக் அதிரடி

 
Published : Oct 17, 2016, 05:10 AM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
"பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்": நவீன் பட்நாயக் அதிரடி

சுருக்கம்

யூரியில் கடந்த மாதம் பாக். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக பிறந்த நாள் கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் 18 ஆம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீர், யூரி மாவட்டத்தில் இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

உயிரிழந்த வீரர்களின் நினைவாக தனது பிறந்த நாளை கொண்டாடப்போவதில்லை என்று நவீன் பட்நாயக் கூறியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூரியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக இன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடவில்லை. பிறந்த நாளையொடி வாழ்த்து தெரிவிக்க தனது இல்லத்துக்கு பிஜூ ஜனதாதள கட்சியினரும் ஆதரவாளர்களும் வர வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"