
கடந்த 8ம் தேதி செவ்வாய்கிழமையன்று தொலைக்காட்சிகளில் மோடி தோன்றி பேசிக்கொண்டிருக்கும்போது ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ந்து போனது.
120 கோடி பேரில் 4 பேர் மட்டும் எந்தவொரு ஆச்சர்யமும் இல்லாமல் இந்த விஷயத்தை பார்த்தனர்.
காரணம், இது இந்த 4 பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்து வந்ததுதான்.
500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி வெளிப்படையாக வந்து அறிவித்தாலும் பின்னணியாக செயல்பட்டது என்னமோ மற்ற 3 பேர் தான்.
அவர்கள், முதலாமவர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இரண்டாமவர் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், மூன்றாவது நபர் தமிழ்நாடு கேடர் அதிகாரியான மத்திய பொருளாதார நிதிதுறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தான்.
புது 500, 200 ரூபாய் புழகத்திற்கு வரப்போகிறது என்பது அது தொடர்பாக பணியாற்றிய நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.
ஆனால், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்போகிறார்கள் என்ற ரகசியம் மேற்சொன்ன இந்த 4 பேருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
சந்திரபாபு நாயுடு போன்ற மிக நெருங்கிய கூட்டணி கட்சி தவைர்களுக்கு இது தொடர்பான விஷயம் கசிந்தாலும், உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.
பணம் அச்சடித்த ஊழியர்களும் இது வழக்கமான நிகழ்வு தான் என்று நினைத்து கொண்டிருந்த வேளையில், 4 பேருக்கு மட்டுமே தெரிந்திருந்த மிகப்பெரிய ரகசியத்தை மோடி போட்டுடைத்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார்.