சமஸ்கிருதத்தை விட தொண்மையான மொழி தமிழ் - ஒருவழியா ஒப்புக்கொண்ட பிரதமர் மோடி...!

 
Published : Feb 16, 2018, 03:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
சமஸ்கிருதத்தை விட தொண்மையான மொழி தமிழ் - ஒருவழியா ஒப்புக்கொண்ட பிரதமர் மோடி...!

சுருக்கம்

modi says Tamil is older than Sanskrit

சமஸ்கிருதத்தை விட தொண்மையான மொழி தமிழ் என பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். 

மத்திய அரசு இந்தியை முதன்மை மொழியாக மாற்ற அரும்பாடு பட்டு வருகிறது. அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழும்பி வருகிறது. 

ஏற்கனவே சாலையோரங்களில் இருக்கும் மைல்கற்களில் தமிழ் மொழி அழிக்கப்பட்டு இந்தியில் எழுதியது பெரும் சர்ச்சையை எழுப்பியது. 

அதேபோல் தமிழ்மொழியை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி மத்திய அரசு புறக்கணித்தது.  

இதனிடையே தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தரும் வகையில் சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் தகவல்களில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது. 

தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிகளில் அறிவிப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென 2 மொழிகள் மட்டுமே இடம் பெற்று தமிழ் மொழி நீக்கப்பட்டது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே மீண்டும் பலகையில் தமிழ்மொழி இடம் பெற்றது.

இந்நிலையில், டெல்லியில் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் மாணவர்கள் தமிழ் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!