"வங்கியில் டெபாசிட் செய்த விவரங்களை அளிக்க வேண்டும்" – பாஜக எம்.பிகளுக்கு மோடி அதிரடி உத்தரவு

Asianet News Tamil  
Published : Nov 29, 2016, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
"வங்கியில் டெபாசிட் செய்த விவரங்களை அளிக்க வேண்டும்" – பாஜக எம்.பிகளுக்கு மோடி அதிரடி உத்தரவு

சுருக்கம்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கடந்த 8ம் தேதி முதல் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து மக்கள் தங்கள் கைகளில் இருப்பு வைத்துள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவும், டெபாசிட் செய்யவும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

இதனிடையே, மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அரசின் இந்த திட்டம் ஏற்கனவே பாஜகவினருக்கு தெரியும் என்றும், அவர்கள் தங்களது கருப்பு பணத்தை ஏற்கனவே வங்கிகளில் டெபாசிட் செய்து விட்டதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அளிக்க பா.ஜ.க.எம்.பி.க்.களுக்கு பிரதமர் மோடி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதாவது பா.ஜ.க.எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 31 வரையில் வங்கிகளில் டெபாசிட் செய்த கணக்கு விவரங்களை பிரதமர் மோடி கேட்டுள்ளார்.

இந்த வங்கி கணக்கு விவரங்களை பாஜக தலைவர் அமித்ஷாவிடம் தாக்கல் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

வங்கி கணக்குகளை தவறாக பயன்படுத்தி பா.ஜ.க.எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கருப்பு பணத்தை யாரும் வெள்ளையாக்கவில்லை என்பதை வெளிப்படையாக காட்டவே மோடி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பா.ஜ.க.வினர் இந்த வங்கி கணக்கு விவரங்களை அளிக்க எந்தவித கால அவகாசமும் அளிக்கவில்லை. உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பிரியாணி, தர்பூசணி சாப்பிட்டவர்கள்.. அதிகாலையில் 4 பேருக்கு நடந்த துயரம்.. அதிர்ச்சியில் போலீஸ்
வங்கியில் பணம் எடுக்க... அக்காவின் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து வந்த தம்பி! அதிர வைக்கும் சம்பவம்