இந்திரா காந்தியை விமர்சித்த மோடிக்கு இப்படி ‘மூக்குடைப்பா’….!

Asianet News Tamil  
Published : Nov 29, 2017, 08:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
இந்திரா காந்தியை விமர்சித்த மோடிக்கு இப்படி ‘மூக்குடைப்பா’….!

சுருக்கம்

Modi has criticized Indira Gandhi for this

ஏழை மக்கள் அதிகம் இருக்கும் மூர்பி பகுதிக்கு இந்திரா காந்தி வரும்போது, மூக்கை கைக்குட்டையால் மூடிக்கொண்டார். நிலபிரபுத்துவத்துவத்துடன்தான் இன்னும் காங்கிரஸ் கட்சியினர் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதற்காக இந்திரா காந்தி மூக்கைப் பொத்திக்கொண்டு சென்றார் என்ற விளக்கம் கிடைத்துள்ளது.  

சட்டசபைத் தேர்தல்

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 4 , 9 ந் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜனதா கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும், கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அனல்பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர்.

குஜராத்தின் மார்பி நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது-

காங்கிரஸ் கட்சி நிலப்பிரபுத்துவ மனநிலையில் உள்ளது என்பது ஒரு உதாரணம் கூறுகிறேன். மோர்பிபகுதிக்கு இந்திரா காந்தி வந்தபோது அவர் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டார். இது தொடர்பான புகைப்படம் ‘சித்ரலேகா’ பத்திரிகையில் வந்துள்ளது நினைவு இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இந்த தெரு மணம் வீசுகிறது. மனிதநேயத்தின் மனம் வீசுகிறது என்றார்.

 ‘மூக்குடைப்பு’

இந்நிலையில், மோர்பி தொகுதியில் இந்திரா காந்தி மூக்கை பொத்திகொண்டு சென்றது உண்மை தான் அதற்கான விளக்கத்தை அந்த பத்திரிகை அளித்துள்ளது..

ஏனென்றால், மோர்பி தொகுதியில் உள்ள மோர்ச்சா அணை ஆகஸ்ட் 11, 1979 -ம் ஆண்டு உடைந்து அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது.

அதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். விலங்குகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. ஆங்காங்கே மனித உடல்கள் அழுகி, சிதைந்து காணப்பட்டது.

இந்த இடத்தை பார்வையிட அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆகஸ்ட் 16 ந்தேதி வந்தார். அப்போது அந்த் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. அதனால்தான் அவர் தனது மூக்கை பொத்திகொண்டு செல்லும் காட்சியை சித்ரலேகா பத்திரிகை இதழ் 1979 ஆகஸ்ட் 27 ம் தேதி வெளியிட்டு இருந்தது. தற்போது இது குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் இப்படி ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!