“நீங்கள் செய்யும் தியாகம் எதுவும் வீண் போகாது..” – மோடி உறுதி

 
Published : Nov 20, 2016, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
“நீங்கள் செய்யும் தியாகம் எதுவும் வீண் போகாது..” – மோடி உறுதி

சுருக்கம்

உத்தர பிதேச மாநிலம் ஆக்ராவில் அவைருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து  பேசிய பிரதமர் மோடி,

கறுப்பு பண ஒழிப்பில் மத்திய அரசுக்கு ஏழைகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஆதரவு அளித்து வருகன்றனர். மத்திய அரசின் நடவடிக்கையால் கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கையால் 5 லட்சம் கோடிக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், நீங்கள் செய்யும் தியாகம் எதுவும் வீண் போகாது என்றும், யாரையும் கஷ்டப்படுத்தும் நேர்ககில் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவில்லை

பண பரிவர்த்தனை சீராக இன்னும் 50 நாட்கள் ஆகும். தான் கூறியவாறு இன்னும் 50 நாட்கள் மக்கள் பொறுத்துக்கொள்வார்கள் என்றும் நம்புவதாகவும், இந்த அரசு ஏழைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. நாட்டில் உள்ள நேர்மையான மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் மோடி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!