1000 ரூபாய் நோட்டு வருகிறதா…? – மோடி அறிவிப்பு…?

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 10:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
1000 ரூபாய் நோட்டு வருகிறதா…? – மோடி அறிவிப்பு…?

சுருக்கம்

கடந்த மாதம் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்த்து. இதையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. ஆனால், பணம் செல்லாத விவகாரத்தில் பொதுமக்கள் இதுவரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

தினமும் காலை முதல் மாலை வரை அனைத்து ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிகள் முன் கூட்டமாக திரண்டு பணம் பெற்று செல்கின்றனர். அதில் சில வங்கிகளில் ரூ.4000 மட்டுமே தரப்படுகிறது. இதனால், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும், தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள், வங்கிக்கு சென்று வரிசையில் காத்திருப்பதால், அவர்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், நாளை மறுநாள் 20017 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் 1000 ரூபாய் புதிய நோட்டுகள் கிடைக்கம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது நாளை நள்ளிரவு, ஏடிஎம் மெஷினில் பணத்தை பொறுத்திவிட்டு, அதிகாலை முதல் பணம் அனைவருக்கும் கிடைக்கும்.

இதை தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம், பொதுமக்களிடம் சிறப்புரையாற்றுவார் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, புதிய 1,000 ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

கல்பாக்கம் அணு உலை புதிய சாதனை.. வரலாற்று மைல்கல்.. பிரதமர் மோடி பெருமிதம்!
Expensive Egg: ஒரே ஒரு முட்டை விலை ரூ.25,000..! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?