“தனது அதிரடி அறிவிப்பை வாபஸ் வாங்குகிறாரா மோடி....???”

 
Published : Nov 20, 2016, 05:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
“தனது அதிரடி அறிவிப்பை வாபஸ் வாங்குகிறாரா மோடி....???”

சுருக்கம்

உத்திர பிதேச மாநிலம் ஆக்ராவில் அவைருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி ,

கான்பூர் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று பாஜக அரசு அளித்த உறுதி மொழிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது என தெரிவித்தார்.

மேலும், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவி வருவதாலும், நாட்டில் பெரும் கலவரம் ஏற்படலாம் என உச்சநீதிமன்றமே  எச்சரித்துள்ளதாலும், இதுகுறித்து தேவையான மாற்றம் செய்யப் போவதாக தெரிவித்த அவர், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக மறு பரிசீலனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பழைய நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை வாபஸ் பெறவோ, அல்லது இந்த அறிவிப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவும் வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

டெல்லியில் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு! அடல் கேன்டீனில் தடபுடல் மெனு!
ஓட்டு போட்டா நிலம், தங்கம், தாய்லாந்து டூர்! புனே தேர்தலில் வேட்பாளர்களின் அதிரடி ஆஃபர்! வாக்காளர்கள் குஷி!