என்டிஏ கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் ஒரு தலைவர் தொடர்ந்து 3-வது தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது கூடுதல் விஷயம் ஆகும்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களை கைப்பற்றி உள்ளது.
எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 தொகுதிகள், சமாஜ்வாதி 39 தொகுதிகள், திரிணமூல் காங்கிரஸ் 29 தொகுதிகள், திமுக 21 தொகுதிகள், தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
undefined
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு ஆதரவாக உள்ளார். மேலும் இந்த கூட்டணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் உள்ளார். இந்த நிலையில் என்டிஏ கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் ஒரு தலைவர் தொடர்ந்து 3-வது தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது கூடுதல் விஷயம் ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு, ஜெயந்த் சவுத்ரி, சிராக் பாஸ்வான், நிதிஷ் குமார் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். … pic.twitter.com/aROBC6hRXE
— Asianetnews Tamil (@AsianetNewsTM)அதுமட்டுமில்லாமல், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூன் 8) மாலை பதவியேற்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பாஜக 370 இடங்களை (NDA கூட்டணி உட்பட 400+) என்ற லட்சிய இலக்காக நிர்ணயித்திருந்தது, ஆனால் அவை எதிர்கட்சி கூட்டணியான காங்கிரஸ் தலைமையிலான இந்திய அணியால் பின்வாங்கப்பட்டது.
தேர்தல் கருத்துக் கணிப்புகளை மீறி, முக்கிய மாநிலங்களில் பாஜகவின் பலத்தைக் குறைத்து, எதிர்க்கட்சி 232 இடங்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்டிஏ தலைவர்கள் இன்று இரவு 8 மணிக்கு ராஷ்டிரபதி பவனுக்கு வந்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள் என்கிற தகவல் தற்போது அரசியல் வட்டாரங்களில் வெளியாகி உள்ளது.