
உத்தரபிரதேசம், கோவா,மனிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்ல் பிப்ரவரி மாதம்
தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளது. இதற்காக காங்கிரஸ்,
பா.ஜ.க.உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
கோவா மாநில சட்டப் பேரவைக்கு வரும் 4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஏற்கனவே அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது.
அதனால் அங்கு ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறது..
இதனிடையே பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பானாஜியில் நடைபெற்ற
பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது எதிர்க்கட்சியினர் ஏற்கனவே தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டனர்
என்றும் தோல்வியை சந்திக்க தயாராக ஈருங்கள் என்றும் சவால் விட்டார்.
ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் பிரதமர் அலுவலகம் தான் பஞ்சாப்,
கோவா மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே தேதியில் நடத்த
தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக கூறிவருகின்றனர்.
தேர்தல் ஆணையம் மதிப்பு மிக்க ஒரு அமைப்பு. அதை அவர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர் என மோடி தெரிவித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கோவா மாநிலத்தின்
சுற்றுலா வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என மோடி தெரிவித்தார்.