" என்னை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து, முத்தமிட்டார் " - பெண்ணின் பரபரப்பு கடிதத்தால் பதவி இழந்த ஆளுநர்

Asianet News Tamil  
Published : Jan 28, 2017, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
" என்னை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து, முத்தமிட்டார் " - பெண்ணின் பரபரப்பு கடிதத்தால் பதவி இழந்த ஆளுநர்

சுருக்கம்

என்னை வலுக்கட்டாயமாக  கட்டிப்பிடித்து முத்தமிட்டார் என்ற ஒரு பெண்ணின் பரபரப்பு கடிதமே மேகலாய ஆளுநர் பதவியில் இருந்து  வி. சண்முகநாதன்  ராஜினாமா செய்ய முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. 

மேகாலயா ஆளுநர் மாளிகைக்கு மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பல பணிகளுக்காக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த

 ஒரு பெண்ணிடம் ஆளுநர் வி.சண்முக நாதன் தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டி அந்த பெண் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கடிதம் எழுதி, கையொப்பமிட்டு அனுப்பி உள்ளார். அதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை ஊழியர்களும் புகார் கடிதம் எழுதவே ஆளுநர் வி.சண்முகநாதன் பதவி பறிப்பு ஏறக்குறைய உறுதியானது.

மேகாலய மாநில ஆளுநராக கடந்த 2015ம் ஆண்டு தஞ்சையைச் சேர்ந்த வி.சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். திருமணமாகாத, இவர் முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராக 40 ஆண்டுகள் இருந்தவர். 

இந்நிலையில், ஆளுநர் அலுவலகத்தின் மாண்புக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், மேகலாய ஆளுநர் வி.சண்முகநாதன் செயல்படுகிறார். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை ஊழியர்களில் 98 பேர் கடிதம் எழுதினர். 

இந்த கடிதம் பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டது. மேலும், இந்த செய்தி வைரலாக சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து, ஆளுநர் பதவியில் இருந்து வி.சண்முகநாதன் ராஜினாமாசெய்தார். அவரின் கடிதத்தையும் குடியரசுதலைவர்  பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார். 

இந்நிலையில், இந்த பிரச்சினை அனைத்துக்கும் ஒரு பெண் எழுதிய கடிதம் தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இந்த பெண் குடியரசு தலைவர், பிரதமர் மோடி, மற்றும் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கும் கடிதம் எழுதியது. இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மேகாலயாவில் இருந்து வெளியாகும் ஹைலாண்ட் போஸ்ட் என்ற நாளேட்டில் செய்தி வெளியாகி உள்ளது. அதில், கடந்த ஆண்டு நவம்பர் 7-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு மக்கள் தொடர்பு அதிகாரி பணிக்காக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் தேர்வான பெண்களுக்கு டிசம்பர் 8-ந்தேதி அடுத்த தேர்வு நடத்தப்பட்டுள்ளது. 

அதில் நேர்முகத் தேர்வுக்காக வந்த பெண்ணை ஆளுநர் வி.சண்முகநாதன், வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து, முத்தமிட்டார். தன்னிடம் அத்துமீறி ஆளுநர் நடந்து கொண்டார் என்று அந்த பெண் குற்றம் சாட்டி இருந்தார் என்று அதில் வெளியாகி இருந்தது. 

இந்த கடிதம் குறித்த செய்தி வெளியானவுடன் ஆளுநராக இருந்த சண்முகநாதன் அதை மறுத்தார். தான் நேர்முகத் தேர்வு நடத்திய பெண்கள் அனைவரும் மகள், பேத்திகள் போன்றவர்கள் என்று கூறி இருந்தார். 

இந்த பெண்ணின் குற்றசாட்டைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களும், கடிதம் எழுதி 11 குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதில் இளம் பெண்கள் சிலர் ஆளுநர் படுக்கை அறைக்குள் சர்வசாதாரணமாக சென்று வருகின்றனர். ஆளுநருக்கு உதவி செய்ய பெரும்பாலும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இளம் பெண்கள் எப்போதும் வேண்டுமானாலும் வந்து செல்லும் இடமாக, பாதுகாப்பு இல்லாத  இடமாக ஆளுநர் மாளிகை மாறிவிட்டது.  ஆளுநர் மாளிகையின் மான்பை குலைத்துவிட்டது என்று  கடிதத்தில் கூறி இருந்தனர். 

இந்த குற்றச்சாட்டுகளை அனைத்தையும் விசாரணை  செய்த மத்தியஅரசு அதில் உண்மை இருப்பதை உணர்ந்தது. இதைத்தொடர்ந்து, ஆளுநர் சண்முகநாதனை பதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கோரி மத்தியஅரசு நிர்பந்தித்துள்ளது. இதையடுத்து சண்முகநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஓவர் ஆக்டிங் போட்ட 30 வயது டீச்சர்.! நைட்டோடு நைட்டா க.காதலனுடன் சேர்ந்து பத்மா செய்த வேலை! காலையில் பூ, பொட்டுடன்!
எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்.. அலறிய 158 பயணிகளின் நிலை என்ன?