"ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கப் போவதில்லை" - பின்வாங்கியது விலங்குகள் நல வாரியம்…!!!

Asianet News Tamil  
Published : Jan 29, 2017, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
"ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கப் போவதில்லை" - பின்வாங்கியது விலங்குகள் நல வாரியம்…!!!

சுருக்கம்

கடந்த 2009ஆம் ஆண்டு தமிழக அரசு மாநில அளவில் ஜல்லிகட்டுக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்றியது.

ஆனால் பீட்டா உள்ளிட்டசில அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கின.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக

தமிழகத்தில்ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.

இதற்கிடையே இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா? என்று எதிர்பார்ப்பில்

கடைசி நிமிடம் வரை ஜல்லிக்கட்டு நடக்காத காரணத்தினால் மாணவர்கள் போராட்டம் வெடித்தது.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டம்

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசு மூலம் சட்டமாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அட்டவணை ஒன்பதில் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன..

உச்சநீதிமன்றத்தில் உள்ள ஜல்லிக்கட்டு தடை வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில்

தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தை எதிர்த்து சியோப்பா, கியூப்பா என்ற

இரண்டு அமைப்புகளும் இடைக்கால மனுவை தாக்கல் செய்தனர்.

இது தவிர மத்திய அரசு 2016ஆம் ஆண்டு ஜல்லிகட்டுக்கு தடை விதித்த

அறிவிக்கையை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றதையடுத்து விலங்கு நல வாரிய அமைப்பின்

அஞ்சலி சர்மா உள்ளிட்ட மூன்று  உறுப்பினர்கள் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளனர்.

சியோப்பா, கியூப்பா இரண்டும் தனியார் அமைப்புகள். மத்திய அரசின் சட்டத்தை

எதிர்த்து வழக்கு தொடர உரிமை உள்ளது.

ஆனால் மத்திய அரசின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்தை மத்திய

அரசின் அங்கமான விலங்க நல வாரியம் எதிர்க்க முடியாது.

இவ்வாறு மத்திய அரசின் அமைப்பில் இருப்பவர்களே மத்திய அரசின் சட்டத்துக்கு

எதிராக வழக்கு தொடர்வது தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல.

இதனையடுத்தது இடைக்கால மனுவை வாபஸ் பெறுமாறு கோரி வக்கீல் அஞ்சலி சர்மாவுக்கு 

இந்திய விலங்குகள் நல வாரிய செயலாளர் எம்.ரவிக்குமார் கடந்த 24-ந் தேதிகடிதம் ஒன்றை எழுதினார்.

ஆனால் இடைக்கால மனுவை வாபஸ் பெற முடியாது என்றும், மனு தாக்கல் 

செய்ய தனக்கு அதிகாரம் உள்ளதாகவும் அஞ்சலி சர்மா தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் எஸ்.எஸ்.நேகி உறுப்பினர் அஞ்சலி சர்மாவுக்கு 

நேற்று கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில்,ஜல்லிக்கட்டு வழக்கில் இடைக்கால மனு தாக்கல் 

செய்ய முன்பு தவறுதலாக அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அந்த அனுமதியை 

தற்போது வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறிஉள்ளார்.

மேலும் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை

உச்சசீதிமன்றத்தில் எதிர்க்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்.. அலறிய 158 பயணிகளின் நிலை என்ன?
ஒரு சிகரெட் 72 ரூபாய்! அதிரடி வரி உயர்வு மசோதா.. புகைபிடிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!